வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சரகம் நாலுவேதபதி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (வயது35). சம்பவத்தன்று இவர் கள்ளிமேடு அடைப்பாற்றில் சிலருடன் சேர்ந்து இறால் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். ஆனால் அறிவழகன் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வேட்டைக்காரனிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பசுபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அறிவழகன் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.