ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

அய்யம்பேட்டையில் ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2023-07-13 20:20 GMT

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை சுண்ணாம்புக்காரத் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் தினேஷ் (வயது29). இவர் சொந்தமாக கழிவு நீர் வாகனம் வைத்து இப்பகுதியில் கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.இந்த நிலையில் நேற்று தனது கழிவு நீர் வாகனத்தை சுத்தம் செய்துவிட்டு அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றுக்கு தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென ஆற்றின் ஆழமான பகுதிக்குச சென்ற தினேஷ் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை கண்ட அவரது நண்பர்கள் ஓடி வருவதற்குள் முழுவதுமாக நீரில் மூழ்கி விட்டார். சுமார் ஒரு மணி நேர தேடலுக்கு பிறகு அவரது உடலை நண்பர்கள், உறவினர்கள் மீட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் தினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ்  ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்