செஞ்சி அருகேஏரியில் மூழ்கி வாலிபர் சாவு

செஞ்சி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தாா்.

Update: 2023-05-11 18:45 GMT


செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள தேசூர் பாட்டை பகுதியை சேர்ந்தவா் ஏசுதாஸ் மகன் அருள்தாஸ் (வயது 23). இவர் பூக்கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தனது நண்பர்கள் 5 பேருடன், எட்டியதாங்கள் ஏரிக்கு சென்றார். அங்கு அவர்கள் குளித்தனர். அப்போது, நீச்சல் தெரியாத அருள் தாஸ் ஏரியில் மூழ்கினார். இதுபற்றி அறிந்த செஞ்சிதீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, அவரை கரைக்கு, பிணமாக மீட்டு வந்தனர்.

தகவல் அறிந்த செஞ்சி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்