மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதிய விபத்தில் வாலிபர் சாவு

சந்தவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-13 17:36 GMT

கண்ணமங்கலம்

சந்தவாசல் அருகே உள்ள படவேடு சாமந்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 35).

இவர் தனது வீட்டுக்கு மளிகை பொருட்கள் வாங்க இன்று காலை மோட்டார் சைக்கிளில் கேசவபுரம் சென்றார்.

அப்போது எதிரே அண்ணாமலை (50), சேட்டு (55) ஆகியோர் ஒட்டி வந்த மொபட் சத்தியமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சத்தியமூர்த்தி படுகாயம் அடைந்தார்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் வந்து பரிசோதனை செய்து, சத்தியமூர்த்தி இறந்துவிட்டார் என தெரிவித்தார்.

மேலும் காயமடைந்த அண்ணாமலை, சேட்டு ஆகிய இருவரும் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்