மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

வந்தவாசி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-10-25 18:45 GMT

வந்தவாசி

கிருஷ்ணகிரி மாவட்டம், மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சரத்பாபு (வயது 22).

இவர் கடந்த சில மாதங்களாக காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் இனிப்பு தயாரிக்கும் வேலை செய்து வந்தார். இதற்காக காஞ்சீபுரம் அருகே புதுப்பாக்கம் கிராமத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நண்பரை பார்ப்பதற்காக சரத்பாபு மோட்டார்சைக்கிளில் வந்தவாசி-விளாங்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

சளுக்கை கிராமம் அருகே செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிளுடன் சாலையில் விழுந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த சரத்பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சரத்பாபுவின் தாயார் வள்ளியம்மாள் வந்தவாசி வடக்கு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தில் வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்