வாகன விபத்தில் வாலிபர் பலி
மதுரை அருகே வாகன விபத்தில் வாலிபர் பலியானார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா கீழகரிசல்குளத்தை சேர்ந்தவர் முத்தையா (வயது 38). இவர் தனது நண்பர் லட்சுமணன் என்பவருடன், மதுரை சின்னஉடைப்பு பகுதியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர்கள் இருவரும், சின்ன உடைப்பு பகுதியில் வந்தபோது, அவர்கள் வந்த வாகனம் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த முத்தையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த லட்சுமணன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.