மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் சாவு

குரிசிலாபட்டு அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-09-05 18:25 GMT

திருப்பத்தூர் தாலுகா ஆண்டியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் சதீஷ் (வயது 25), சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

அதே ஊரைச் சேர்ந்த முனிரத்தினம் மகன் முகேஷ் (27) ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். நண்பர்களான இருவரும் இன்று மோட்டார்சைக்கிளில் மீட்டுர் வரை சென்றனர்.

பின்னர் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது குரிசிலாப்பட்டு அடுத்த பாபா நகர் அருகே சதீஷ ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இருந்து அருகில் இருந்த மரத்தில் மீது மோதியது.

இதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த முகேஷ் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்