வேன் மோதி வாலிபர் சாவு; தாய் படுகாயம்
சமயநல்லூர் அருகே வேன் மோதி வாலிபர் இறந்தார். அவரது தாய் படுகாயம் அடைந்தார்.
வாடிப்பட்டி,
மதுரை திருநகர் மகாலட்சுமி காலனி அண்ணா தெருவில் வசித்து வருபவர் பாலன். இவரது மனைவி பத்மாவதி (வயது 48). இவர்களது மகன் பரத்குமார் (23). ஜெராக்ஸ் மிஷின் மெக்கானிக். இந்த நிலையில் பரத்குமார் கடந்த மாதம் 29-ந்தேதி இரவு 8.45 மணிக்கு சமயநல்லூரில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். திருமங்கலம்-திண்டுக்கல் நான்கு வழி சாலையில் சமயநல்லூர் செல்வதற்காக வைகை நகர் பிரிவில் ஓரமாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தாய் பத்மாவதி, மகன் பரத்குமார் இருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நேற்று சிகிச்சை பலனின்றி பரத்குமார் உயிரிழந்தார். அவரது தாய் பத்மாவதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.