மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

ஈத்தாமொழி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். 2 நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-01-17 18:45 GMT

ஈத்தாமொழி:

ஈத்தாமொழி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். 2 நண்பர்கள் படுகாயம் அடைந்தனர்.

வாலிபர் பலி

நாகர்கோவில் அருகே உள்ள கீழகிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் வினோத் (வயது24). இவரும் மேலகிருஷ்ணன்புதூர் ராமன்புதூரை சேர்ந்த அப்பாதுரை மகன் சதீஷ் (20), இலந்தையடித்தட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் சந்தோஷ்ராம் (20) ஆகியோரும் நெருங்கிய நண்பர்கள்.

ேநற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் நண்பர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் மேலகிருஷ்ணன்புதூரில் இருந்து ஈத்தாமொழி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சதீஷ் ஓட்டி சென்றார்.

செம்பொன் கரை அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.

பரிதாப சாவு

இதில் நண்பர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஈத்தாமொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 3 பேரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், வினோத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் சந்தோஷ்ராம் மற்றும் சதீஷ் இருவரையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்