விபத்தில் வாலிபர் பலி

கங்கைகொண்டான் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2023-06-21 19:53 GMT

கங்கைகொண்டான் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

வாலிபர்

நெல்லை அருகே உள்ள தாழையூத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 24). சங்கர் நகரை சேர்ந்தவர் சக்தி குமார் (19). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு கங்கைகொண்டான் சிப்காட் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த கார், ஆட்டோ மற்றும் இவர்களது மோட்டார் சைக்கிள் ஆகியவை மோதிக்கொண்டன. இதில் பலத்த காயம் அடைந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். சக்தி குமார் படுகாயம் அடைந்தார்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். சக்திகுமாரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்