திருச்சுழி,
திருச்சுழி அருகே உள்ள கத்தாளம்பட்டியை சேர்ந்த கெங்காபிரபு (வயது 29). இவர் மடத்துப்பட்டியில் உள்ள தனியார் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவர் பணி நிமித்தமாக இரு சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை- திருச்சுழி மெயின் ரோடு பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கெங்கா பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.