விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2022-09-13 18:06 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சித்தளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சம்பத் (வயது 25). இவருக்கு திருமணம் ஆகவில்லை. சம்பத் நேற்று சித்தளி கிராமத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பேரளி கிராமம் அருகே வந்தபோது எதிரில் பெரம்பலூரில் இருந்து அரியலூர் நோக்கி வந்த மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சம்பத் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவர் சிதம்பரத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்