விபத்தில் வாலிபர் பலி

மானூர் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2022-08-19 19:59 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சந்தனகுமார் (வயது 19). இவர் தனது மோட்டார் சைக்கிளில் அழகியபாண்டியபுரம் வந்துவிட்டு ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டு இருந்தார். மானூர் அருகே வந்த போது, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார். அந்த சமயத்தில் எதிரே வந்த கார், ேமாட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. மேலும் மேற்படி லாரியின் பின்சக்கரத்திலும் மோட்டார் சைக்கிள் சிக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சந்தனகுமார் படுகாயம் அடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உக்கிரன்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தனகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்