சாயல்குடி
சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுபதி மகன் ஜெயராமன் (வயது 26). இவர் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் எம்.காம். படித்து வந்தார். இந்நிலையில் சாயல்குடி அருகே உள்ள கூரான் கோட்டை கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பர் திருமணத்தில் கலந்து கொண்டு மீண்டும் பெரியகுளம் கிராமத்திற்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூப்பாண்டியபுரம் கிராமம் அருகே செல்லும்போது முன் சென்ற காரில் ஜெயராமன் சென்ற இருசக்கர வாகனம் உரசியதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.