விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

Update: 2023-07-15 18:34 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் லோக பிரசாந்த் (வயது 25). விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லை சேர்ந்த அருள் ஜோஷ்(26). இவர்கள் 2 பேரும் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். மதுரையில் வேலை நிமித்தமாக வந்தவர்கள் அருள் ஜோஷ் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் வரும்போது மல்லிபுதூர் விலக்கு அருகே பாலத்தில் மோதியதில் அருள் ஜோஷ் அதே இடத்தில் பலியானார். லோக பிரசாந்த் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்