செஞ்சி அருகேசாலை விபத்தில் வாலிபர் பலி

செஞ்சி அருகே நடந்த சாலை விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-03-14 18:45 GMT


செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள தொட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகன் சக்திவேல் (வயது 29). இவர் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை சாலை வழியாக செஞ்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பெருங்கப்பூர் கூட்டு்ரோடு அருகே வந்தபோது, முன்னாள் சென்ற டிராக்டரை, அதன் டிரைவர் திடீரென பிரேக் போட்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்