ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்.

Update: 2023-05-20 17:14 GMT

ஜோலார்பேட்டை

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்.

தவறி விழுந்தார்

வேலூர் மாவட்டம் மாந்தாங்கல் கிராமம் பள்ளிக்கூடம் தெரு பகுதியை சேர்ந்தவர் சடையாண்டி. இவரது மகன் சின்னதுரை (வயது 30), இவர், நேற்று முன்தினம் இரவு காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு செல்ல ரெயிலில் பயணம் செய்தார்.

ஆம்பூர்-பச்சகுப்பம ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் செல்லும் போது படிக்கட்டில் பயணம் செய்த சின்னதுரை திடீரென தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்