திருக்கோவிலூர் அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

திருக்கோவிலூர் அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிாிழந்தாா்.

Update: 2023-03-10 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரை மகன் பிரகாஷ்(வயது 30). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். மணலூர்பேட்டை மெயின் ரோட்டில் சென்றபோது அந்த வழியாக சென்றவர் மீது மோதாமல் இருப்பதற்காக பிரகாஷ் மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டு நிறுத்திஉள்ளார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் பிரகாஷ் பலத்த காயமடைந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்