தீயில் கருகி வாலிபர் பலி

தீயில் கருகி வாலிபர் பலியானார்.

Update: 2023-05-17 19:26 GMT

உப்பிலியபுரம் ஒன்றியம் தென்புறநாடு ஊராட்சி பச்சமலை வேம்பூரைச் சேர்ந்தவர் ராமர் (வயது 27). விவசாயியான இவர் முந்திரி தோட்டத்தில் உள்ள சருகுகளை எரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ ராமர் அணிந்து இருந்த சட்டையில் பிடித்தது. தொடர்ந்து தீ அவரது உடலில் பிடித்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு டாப்செங்காட்டுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்