புளிய மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி
சோளிங்கர் அருகே புளிய மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
சோளிங்கர்,
சோளிங்கர் வன்னியர் தெருவை சேர்ந்தவர்கள் சந்திரன் மகன் அரி (வயது 20), வெங்கடேசன் மகன் விஷ்வா (21). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சோளிங்கரில் இருந்து வாலாஜா சாலையில் சென்று கொண்டிருந்தனர். சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆவின் பால்பண்ணை அருகில் சென்றபோது நிலை தடுமாறி புளியமரத்தில் மோதினர்.
இதில் அரி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஷ்வா படுகாயம் அடைந்து சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.