தீக்குளித்து வாலிபர் தற்கொலை

திருமருகல் அருகே, நண்பர் உயிரிழந்ததால் மனவேதனை அடைந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-30 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சி சின்னையன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விவேக் (வயது 23).இவரது நண்பர் அய்யப்பன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நண்பர் இறந்ததால் விவேக் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் கொல்லைப்புறத்தில் விவேக் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார்.இதில் தீயில் கருகி படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விவேக் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீசார் வழக்கு ப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்