கடலில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி சாவு
திருச்செந்தூரில் கடலில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மடத்தூரை சேர்ந்த இசக்கிமுத்து மனைவி ராமலெட்சுமி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் பெரியசாமி (24). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலையில் அய்யா கோவில் அருகே பெரியசாமி கடலில் குளித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கடல் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து திருச்செந்தூர் கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிநாயகம் சம்பவ பகுதிக்கு சென்று பெரியசாமி உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுகுறித்து திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.