அரசு பள்ளியில் மகளை சேர்த்த ஆசிரிய தம்பதி

கூடலூரில் அரசு பள்ளியில் மகளை ஆசிரிய தம்பதி சேர்த்தனர்.

Update: 2022-09-09 15:00 GMT

கூடலூர், 

கூடலூர் குசுமகிரியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேவதி, தேவாலா அட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு நிகரழி, மகிழினி என 2 மகள்கள் உள்ளனர். ஆசிரிய தம்பதி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மூத்த மகள் நிகரழியை கூடலூர் வண்டிப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் 1-ம் வகுப்பில் சேர்த்தனர். தொடர்ந்து ரூ.15 ஆயிரம் செலவில் உபகரணங்களை பள்ளிக்கு வழங்கினர். இந்தநிலையில் தனது 2-வது மகள் மகிழினியை கூடலூர் வண்டிப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரிய தம்பதி நேற்று 1-ம் வகுப்பில் சேர்த்தனர். தொடர்ந்து புத்தகம் மற்றும் சீருடையை பள்ளி நிர்வாகம் வழங்கியது. ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் நாற்காலிகள், தண்ணீர் தொட்டிகளை தலைமை ஆசிரியரிடம் ஆசிரிய தம்பதி வழங்கினர். இதுகுறித்து உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமார் கூறும்போது, அரசு பணியில் பணியாற்றி விட்டு தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் பயில வைப்பது தவறான முன் உதாரணம் என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்