தையல் தொழிலாளி தற்கொலை

கள்ளக்குறிச்சியில் தையல் தொழிலாளி தற்கொலை

Update: 2023-02-25 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டுத்தெருவில் வசித்து வந்தவர் முருகன்(வயது 43). தையல் தொழிலாளியான இவர் வீட்டில் இருந்தபடியே துணிகளை தைத்து வந்தார். இவருடைய மனைவி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மகள் மற்றும் மகன் ஆகியோர் வெளியூரில் தங்கி படித்து வருகின்றனர். குடும்பம் தனித்தனியாக பிரிந்து இருப்பதால் விரக்தியில் இருந்து வந்த முருகன் நேற்று முன்தினம் வீட்டில் விஷம்குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்