காற்று வந்ததும் கொடி அசைந்ததா, கொடி அசைந்ததும் காற்று வந்ததா... என்பதற்கு விடை கவிஞர்களுக்கே வெளிச்சம்.. தாவரங்கள், பொருட்கள் அசைவதுதான் காற்று கடந்து போவதற்கான அடையாளம். ஆனால், இங்கே சுழல்காற்று குறுகிய அகலத்தில் கிட்டத்தட்ட 100 மீட்டர் உயரம் வரை எழும்பி ஒரு அனகோண்டா பாம்பு ஆடுவது போன்று மாயாஜாலத்தை நேற்று நடத்திக் காட்டியது. கிட்டத்தட்ட 2 மீட்டர் சுற்றளவுக்குள் மையம் கொண்்டு சுழன்றது. இந்த விந்தை 2 நிமிட நேரம் வரை நீடித்து, ஆடி அசைந்து பின்னர் அடங்கியது. அந்த காட்சிகளில் சில உங்கள் பார்வைக்கு... (படம் சிக்கிய இடம்: மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையம்)