சுகாதாரத்துறை குழுவினர் திடீர் ஆய்வு

சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2023-02-01 19:20 GMT

வேலூர் சத்துவாச்சாரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், கூடுதல் இயக்குனர் ஜெரால்டு மரிய செல்வம் தலைமையிலான குழுவினர் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதார நிலையம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படுகிறதா? என்றும், பணியில் டாக்டர்கள், செவிலியர்கள் சரியாக உள்ளார்களா, மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு உள்ளதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து அங்குள்ள சித்த மருத்துவம், பிரசவ வார்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வந்த நோயாளிகளிடம் அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

ஆய்வின் போது வேலூர் மாவட்ட புள்ளியல்துறை உதவி இயக்குனர் சங்கர், சத்துவாச்சாரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கண்மணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

அதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை குழுவினர் தலைமையில் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்