நரிக்குறவர் இன மக்கள் திடீர் போராட்டம்
மங்களமேடு அருகே நரிக்குறவர் இன மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மங்களமேடு அடுத்துள்ள எறையூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்பேட்டையில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அப்பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு குடிநீர், சாலை வசதி செய்து தரக்கோரி கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ்,மங்களமேடு போலீஸ் உட்கோட்ட சூப்பிரண்டு சீராளன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவர் இன மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.