அய்யம்பாளையத்தில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்
அய்யம்பாளையத்தில் சாலையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது.
பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில், குமரன்குன்று அருள்முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகில் உள்ள சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இந்த சாலையில் குடியிருப்புகள், கோவில், பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் இந்த சாலை வழியாக நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் தவறி விழும் சம்பவம் நடக்கிறது. எனவே விபத்துகள் நிகழ்வதை தடுக்க சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளளர்.