நகராட்சி வணிக வளாகத்தில் திடீர் தீ

ஆரணியில் நகராட்சி வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-08-29 19:04 GMT

ஆரணி

ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் மாளிகை நகராட்சி வணிக வளாகமாகும். இங்குள்ள கடைகளுக்கு சமீபத்தில் வாடகை உயர்த்தப்பட்டது. அதனால் மேல் பகுதியில் 30 கடைகளும் காலியாக உள்ளது. வியாபாரிகள் இல்லாததோடு பொதுமக்களும் வராததால் தினமும் மது அருந்துவதற்கும், சீட்டு ஆடுவதற்கும் அந்த பகுதிக்கு சிலர் கும்பலாக வந்து ெசல்கின்றனர். அங்கு குப்பை மயமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மேல் பகுதியில் உள்ள ஒரு கடையிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. உடனே கீழ் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.எனினும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பழைய டி.வி. ஒயர் போன்றவை எரிந்து சாம்பல் ஆயின. இது குறித்து தீயணைப்பு படையினர் கூறுகையில், ''இங்கு சமூக விரோதிகள் அதிக அளவில் உலாவி வருகின்றனர். அவர்கள் அணைக்காமல் போட்ட சிகரெட் துண்டால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம்'' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்