ஜாலியாக ஊர் சுற்ற சொந்த வீட்டில் நகையை திருடிய பள்ளி மாணவன்

மதுரை அருகே சொந்த வீட்டிலேயே 52 சவரன் தங்க நகைகளை திருடிய 9-ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-06-26 15:38 GMT

மதுரை:

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள பல்கலைநகரைச் சேர்ந்த 48 வயதான அந்த நபர் அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் தனது வீட்டிலிருந்த 52.5 சவரன் தங்க நகைகளை காணவில்லை என நாகமலைபுதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசாரின் விசாரணையில் புகார் கொடுத்தவரின் 14 வயது மகன், சொந்த வீட்டிலேயே திருடியதும், அவற்றை தனது பள்ளி நண்பர்கள் இருவருடன் சேர்ந்து விற்று அந்த பணத்தில் பள்ளி ஆண்டு தேர்வு விடுமுறை நாட்களில் ஜாலியாக ஊர், ஊராக சுற்றுலா சென்று வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து மூன்று மாணவர்கள் மீதும் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவர்கள் மூவரும் நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்