10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன்

சேலத்தில் 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 10-ம் வகுப்பு மாணவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-03-15 20:05 GMT

சேலத்தில் 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 10-ம் வகுப்பு மாணவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

10-ம் வகுப்பு மாணவி

சேலத்தை சேர்ந்த 14 வயதுடைய மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அந்த மாணவி 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதை கேட்டு பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக மாணவியிடம் பெற்றோர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாணவிக்கும், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயதுடைய மாணவன் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதில் அவர்கள் இருவரும் நெருங்கி பழகியதால் மாணவி கர்ப்பமடைந்தது தெரியவந்தது.

மாணவன் மீது வழக்கு

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில், தனது மகளிடம் பழகி கர்ப்பமாக்கிய மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாணவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே அவர்கள் இருவரும் விரைவில் நடைபெற இருக்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்