ஒரே நாளில் 30 சாதனைகள் செய்து காட்டிய மாணவி

ஒரே நாளில் 30 சாதனைகளை செய்து காட்டி பள்ளி மாணவி அசத்தினார்.

Update: 2023-09-27 19:17 GMT

நெல்லை:

நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன்- தேவி பிரியா தம்பதியின் மகள் பிரிஷா (வயது 14). ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி 2 வயதில் இருந்தே யோகாசனங்கள் கற்று இதுவரை 70 உலக சாதனைகளை படைத்துள்ளார். மேலும் இளம் வயதிலேயே 3 முனைவர் பட்டங்களையும் முதன் முறையாக இவர் பெற்றார்.

இந்த நிலையில் தனது 100-வது சாதனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு நேற்று கண்களை கட்டிக்கொண்டு 30 நிகழ்வுகளை செய்து தனது 100-வது சாதனையை நிறைவு செய்துள்ளார். பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் நோபல் வேர்ல்டு ரெகார்ட் நிறுவனம் முன்பு மாணவ-மாணவிகள் முன்னிலையில் கண்களை கட்டிக்கொண்டு வாமதேவ ஆசனத்தில் அதிக பொருட்களை அடையாளம் காணுதல், கண்களைக் கட்டிக் கொண்டு திரையில் தெரியும் ஆசனங்களை மிக வேகமாக செய்வது, கண்களை கட்டிக் கொண்டு மனித உடலில் கட்டப்பட்டுள்ள பலூன்களை உடைத்தல், கண்களைக் கட்டிக்கொண்டு அதிக தூரம் சைக்கிள் ஓட்டுதல், ஒரு கையால் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் கையில் வளையத்தை சுத்திக்கொண்டே சைக்கிள் ஓட்டுதல் உள்பட 30 நிகழ்வுகளை செய்து காட்டி சாதனை படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்