செயற்கை நீர்வீழ்ச்சியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி மாணவன் பலி

சிறுமலையில் செயற்கை நீர்வீழ்ச்சியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி மாணவன் பலியானார்.

Update: 2022-07-30 13:37 GMT

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பொன்னுருக்கியை சேர்ந்தவர் பழனிச்சாமி. அவருடைய மகன் சம்பத் (வயது 15). இவர், சிறுமலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று இவர், தனது நண்பர்களுடன் சிறுமலை வெள்ளிமலையில் உள்ள செயற்கை நீர்வீழ்ச்சியில் குளித்தார். சம்பத்துக்கு நீச்சல் தெரியாததால், திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், கிராம மக்கள் சம்பத்தை தேடினர். அப்போது, நீர்வீழ்ச்சியில் சம்பத் பிணமாக மீட்கப்பட்டார். தண்ணீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சம்பத் உடலை கைப்பற்றி, பிரேத சோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்