பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்

தேவர் ஜெயந்தி விழாவிற்கு வரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் மூவேந்தர் முன்னேற்ற கழக கூட்டத்தில் தீர்மானம்

Update: 2022-10-11 18:45 GMT

சீர்காழி:

சீர்காழியில் மூவேந்தர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சீர்காழி நகர செயலாளர் ஜீ.வி.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சட்ட ஆலோசகர் கே.காளிமுத்து, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநகரி முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் பாபு வரவேற்றார். தேவர் ஜெயந்தி விழாவிற்கு போடப்பட்ட 144 தடை உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருகிற 30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பசும்பொன்னுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் மாநிலத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிப்பது. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரை சூட்ட வேண்டும். தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருகை தரும் மக்களுக்கு வாடகை வாகனம் எடுத்து வர அனுமதி அளிக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது. மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர அமைப்பாளர் பாலு, நகர தலைவர் சீனிவாசன், ஒன்றிய துணைத் தலைவர் கமலக்கண்ணன், தொழிற்சங்க செயலாளர் குமார், வர்த்தக பிரிவு செயலாளர் கலை, தொண்டர் படை செயலாளர் மணி, நிர்வாகிகள் செழியன், பேட்டரி சங்கர், மதி, சுகுமார் ராமச்சந்திரன், மணிகண்டன், பிரேம்நாத், சுரேஷ், ஐயப்பன், மோகன், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆதமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்