எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்க அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டத்திற்கு அரியலூருக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-01-11 17:59 GMT

அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்களின் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரியலூரில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொது கூட்டத்திற்கு வருகை தரும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாலை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அழைத்து வரவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவரும், ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராம ஜெயலிங்கம் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்