கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது.
கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 3 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பணியில் பணிபுரிபவர்களை சார்ந்தோர் தங்களது கோரிக்கையை மனுவாக இரு பிரதிகளில், அடையாள அட்டை நகலுடன் வழங்கி பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.