பிளஸ்-2 வகுப்பை முடித்து உயர்கல்வியில் சேராத அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு முகாம்

பிளஸ்-2 வகுப்பை முடித்து உயர்கல்வியில் சேராத அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு முகாம் பள்ளிக்கல்வித்துறை தகவல்.

Update: 2022-10-27 18:40 GMT

சென்னை,

தமிழ்நாடு, அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2021-2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 வகுப்பு முடித்த மாணவர்களில் பலர் உயர்கல்விக்கு சென்றுவிட்டனர்.

எனினும் சூழ்நிலை காரணமாக சில மாணவர்கள் இன்னமும் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்காகவே தமிழ்நாட்டில் உயர்கல்விக்கான சிறப்பு முகாம்கள் இதுவரை 2 முறை நடத்தப்பட்டிருக்கின்றன. தற்போது 3-வது முறையாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த முகாம்களில் கல்லூரி சேர்க்கைக்காக முறையான வழிகாட்டுதலோடு ஆலோசனைகள் வழங்கப்பட இருக்கின்றன. கண்முன் உள்ள பல்வேறு வாய்ப்புகளை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்வதுடன் உயர்கல்வியின் அவசியமும் இதில் எடுத்துரைக்கப்படும்.

இதுவரை கல்லூரியில் சேராத தங்கள் வகுப்பு நண்பர்களை அழைத்துக்கொண்டு வரும்படியும், அப்படி முடியாதபட்சத்தில் அவர்கள் குறித்த தகவல்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அளிக்கலாம்.

வழிகாட்டுதல்களை தெரிந்து கொள்ள வரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப்பயிற்சி பெற்ற முதன்மை பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மூலம் அவரவர் பயின்ற பள்ளிகளில் ஆலோசனைகள் வழங்கப்பட இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்