மின்இணைப்பு பெயர் மாற்றத்துக்கான சிறப்பு முகாம்
நெல்லையில் மின்இணைப்பு பெயர் மாற்றத்துக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவின்பேரில் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களில், வீட்டு மின்இணைப்பு மற்றும் பொது மின்இணைப்புகளை பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் தொடங்கப்பட்டது.
நெல்லை மகாராஜநகர் பிரிவு அலுவலகத்தில் நடந்த முகாமில், நெல்லை மண்டல தலைமை மின்பொறியாளர் குப்புராணி கலந்து கொண்டு மின்நுகர்வோருக்கு பெயர் மாற்றம் ஆணை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். அவருடன் நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ்மணி, நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி, உதவி செயற்பொறியாளர் (நெல்லை சந்திப்பு உபகோட்டம்) சிதம்பரவடிவு மற்றும் பலர் கலந்து கொண்டனா்.