வீட்டில் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது
திருப்பத்தூரில் வீட்டில் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது.
திருப்பத்தூர் பாலம்மாள் காலனியில் செல்வம் என்பவரது வீட்டில் 5 அடி நீள நல்லபாம்பு ஒன்று புகுந்தது.
இதை பார்த்த அவர் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று உரிய பாதுகாப்புடன் பாம்பை லாவகமாக பிடித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பாம்பை திருப்பத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.