ராணுவ வீரர் வீட்டுக்குள் புகுந்த பாம்பு
போடி அருகே ராணுவ வீரர் வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
போடி அருகே உள்ள ரெங்கநாதபுரம் ராணி மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்தவர் வைரமுத்து. ராணுவ வீரர். இவரது வீட்டிற்குள் நேற்று காலை பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி 7 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.