ஸ்கூட்டருக்குள் புகுந்த பாம்பு

வேடசந்தூரில் ஸ்கூட்டருக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.

Update: 2023-05-02 19:00 GMT

வேடசந்தூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் நாகராணி (வயது 45). இவர் அதே பகுதியில் தையல் பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார். நேற்று அவர், தனது ஸ்கூட்டரை பயிற்சி நிலையம் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அந்த ஸ்கூட்டருக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நாகராணியிடம் கூறினர். உடனே அவர் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் தேடினர். ஆனால் பாம்பு சிக்கவில்லை. இதையடுத்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு ஸ்கூட்டரில் உள்ள பாகங்களை ஒவ்வொன்றாக கழற்றினர். அப்போது ஸ்கூட்டருக்குள் பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு வெளியே வந்தது. அங்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் தலைதெறிக்க ஓடினர். பின்னர் அந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்