மணப்பாறை:
மணப்பாறையை அடுத்த புத்தானத்தத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று மாலை பாம்பு ஒன்று புகுந்து அங்குள்ள ஓட்டின் உள்பகுதியில் இருந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் அது பற்றி தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று சுமார் 6 அடி நீளம் உள்ள பாம்பை பிடித்து சென்று, வனப்பகுதியில் விட்டனர்.