நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் புகுந்த பாம்பு

நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் புகுந்த பாம்பு

Update: 2022-12-10 19:00 GMT


நத்தத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் நல்லபாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் திருக்கோல்நாதர் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்கு அது அலுவலகத்திற்குள் புகுந்து ஒரு அறைக்குள் பதுங்கியது.

இதையடுத்து பாம்பை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். சிலமணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு பாம்பை லாவகமாக தீயணைப்பு படைவீரர்கள் பிடித்தனர். பிடிபட்டது 4 அடி நீளமுள்ள நல்லபாம்பு என்றும், அதனை நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டோம் என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்