அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்த பாம்பு

விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

Update: 2022-09-20 18:45 GMT

விழுப்புரம் 

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் பேரூராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட வி.தொட்டி பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. நேற்று காலை ஊழியர் ஒருவர், இந்த அங்கன்வாடி மையத்தின் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கு 5 அடி நீள நல்லப்பாம்பு ஒன்று இருந்ததைக்கண்டு அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தார். உடனடியாக அப்பகுதி வார்டு கவுன்சிலர் ஸ்ரீசிவசங்கரி அன்பரசு, இதுபற்றி விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்று சுமார் அரைமணி நேரமாக போராடி அந்த பாம்பை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்