தனியார் பள்ளியில் புகுந்த பாம்பு

பெரியகுளம் வடகரையில் தனியார் பள்ளியில் பாம்பு புகுந்தது.

Update: 2023-08-03 20:00 GMT

பெரியகுளம் வடகரையில் சவுராஷ்டிரா சத்திரம் அருகே தனியார் தொடக்கப்பள்ளி உள்ளது. நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் சாரைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்த பள்ளி மாணவர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் இதுகுறித்து மாணவர்கள் ஆசிரியரிடம் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த தகவலின்படி பெரியகுளம் தீயணைப்பு துறை அலுவலர் தர்மராஜ் தலைமையில் படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு மரத்தில் இருந்த 4 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பை பிடித்தனர். அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பெரியகுளம் வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்