பழனி கிரிவீதியில் ஊர்ந்து சென்ற பாம்பு; பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

பழனி கிரிவீதியில் ஊர்ந்து சென்ற பாம்பை பார்த்து பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Update: 2023-08-22 21:00 GMT

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அடிவாரம் கிரிவீதியில் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, நேற்று காலை அடிவாரம் வடக்கு கிரிவீதியில் பக்தர்கள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அதேபோல் அங்கு பொதுமக்கள் சிலரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது பாம்பு ஒன்று அங்கு கிரிவீதியில் ஊர்ந்து சென்றது. இதனை பார்த்த பக்தர்கள், பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

மேலும் இதுகுறித்து அவர்கள் பழனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதற்குள் அந்த பாம்பு, கிரிவீதியில் சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கம்புகளுக்குள் தஞ்சம் புகுந்தது. இதையடுத்து தீயணைப்பு படைவீரர்கள், கம்புகளை அகற்றினர். பின்னர் அதனுள் பதுங்கியிருந்த சுமார் 8 அடி நீள சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்