ஷூ கம்பெனி பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கே.வி.குப்பம் அருகே ஷூ கம்பெனி பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-13 17:31 GMT

கே.வி.குப்பத்தை அடுத்த சென்றாம்பள்ளியில் தனியார் ஷூ கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இதில் சுமார் 100 பெண்கள் பகல்நேரப் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு பொங்கலை முன்னிட்டு இந்த மாத சம்பளத்துடன் போனஸ் வழங்குவதாகக் கூறி இருந்தனர். மாதாந்திர சம்பளம் 7-ந் தேதி வழங்குவது வழக்கம். ஆனால் இதுவரை வழக்கமான சம்பளமும் தரவில்லை, போனசும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்கு நேற்று மதியம் 1 மணிமுதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று மாலை சம்பளம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இரவு 9 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டனர். மாலை 5 மணிக்கே வீட்டுக்கு வரும் பெண்கள் இரவுவரை வீட்டிற்கு வராததால் அவர்களைத் தேடி உறவினர்கள் வந்தனர். அவர்கள் வெளியே பலமணிநேரம் காத்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்