துரிஞ்சிகுப்பம் பகுதியில் ஒற்றைத்தந்த யானை சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சம்

துரிஞ்சிகுப்பம் பகுதியில் ஒற்றை தந்த யானை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2022-07-12 18:15 GMT

செங்கம்

துரிஞ்சிகுப்பம் பகுதியில் ஒற்றை தந்த யானை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

செங்கம் அருகே உள்ள ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள துரிஞ்சிகுப்பம் பகுதியில் ஒற்றை தந்தத்துடன் யானை ஒன்று நேற்று முன்தினம் இரவு முதல் சுற்றி திரிந்து வருகிறது. இதனை பார்த்த பொது மக்கள் செங்கம் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதை தொடர்ந்து துரிஞ்சிகுப்பம் பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை தந்த யானை நடமாட்டத்தை கண்காணித்து அதனை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.மேலும் துரிஞ்சிகுப்பம், கல்லாத்தூர், ஊர்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வரக்கூடாது எனவும் ஒற்றைக் கொம்பு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த யானை ஆலங்காயம், ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 வருடங்களாக சுற்றி வந்த யானை தற்போது முதல் முறையாக செங்கத்தை ஒட்டி உள்ள ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள துரிஞ்சிகுப்பம் பகுதிக்கு வழித்தடம் மாறி வந்துள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒற்றை தந்த யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்