புகையிலை விற்ற கடைக்காரர் கைது

புகையிலை விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-09 20:18 GMT

திசையன்விளை:

திசையன்விளையை அடுத்த சண்முகபுரம் இட்டமொழி ரோடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் திசையன்விளை டெலிபோன் அலுவலகம் அருகில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட 1,154 புகையிலை பாக்கெட்டுக்கள் விற்பனைக்காக வைத்து இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தேவேந்திரனை போலீசார் கைது செய்து, புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்