போதை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது

நாட்டறம்பள்ளி அருகே போதை பொருட்கள் விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-11 17:22 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (வயது 44) என்பவர் தனது பெட்டிக்கடையில் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்